விஜய் படத்தால் பிரிந்த நயன்தாரா - திரிஷா நட்பு.. மனஸ்தாபத்தில் முன்னணி நடிகை
Nayanthara
Trisha
By Karthick Raja
நயன்தாராவும் திரிஷாவும் நல்ல தோழிகளாக தற்போது இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இருவரும் பேசிக்கொள்ளாமல் மனஸ்தாபத்துடன் இருந்துள்ளார்களாம்.
விஜய் நடிப்பில் உருவான குருவி படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் திரிஷா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம்.

ஆனால், இறுதியில் திரிஷாவிற்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் திரிஷா தனது வாய்ப்பை தட்டி பறித்துவிட்டார் என நயன்தாரா மனஸ்தாபத்தில் இருந்தாராம்.
இதன்பின் சில காலம் திரிஷாவும் நயன்தாராவும் பேசி கொள்ளவில்லையாம். ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முயற்சி செய்த திரிஷா, நடிகை நயன்தாராவிடம் பேச துவங்கியுள்ளார். பின் இருவரும் நல்லபடியாக பேச ஆரம்பித்துள்ளனர்.