ஒருவேலை சண்டை முற்றி இருக்குமோ? நயன் தாராவால் சோகத்தில் தவிக்கும் விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan
1 வாரம் முன்
Edward

Edward

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இத்திருமணத்தினை 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாகவும் சில திருமணத்தில் எடுத்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஒப்பந்தத்தை மீறி வெளியிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் அந்நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதையெல்லாம் கடந்து சரியான பின் நயன் தாரா ஏகே62 படத்தால் விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் இருப்பதாகவும் தன்னை விட்டுவிட்டு சமந்தாவை சிபாரிசு எப்படி செய்யலாம் என்று சண்டை போட்டதாகவும் செய்திகள் கசிந்தது.

அந்த கணம் முதல் விக்னேஷ் சிவன், நயன் தாராவை பற்றி எந்த பதிவினையும் புகைப்படத்தையும் வெளியிட்டு வராமல் இருந்து வருகிறாராம். தங்கமே, கண்மணியே என்று கூறும் அளவிற்கு ரொமான்ஸ் செய்த இருவருக்கும் என்ன ஆச்சி என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

கல்யாணமாகி ரெண்டு மாசத்துல பிரச்சனையா என்றும் நயன் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.