நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு இன்று நிச்சயதார்த்தமா? விரைவில் திருமணம்..வைரலாகும் புகைப்படம்

wedding ladysuperstar nayanthara tamilcinema vigneshshivan tamilactress nayanthara engagement nayanwikki
By Edward Mar 11, 2022 12:43 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன் தாரா சிம்பு, பிரபுதேவா போன்றவர்களின் காதல் வலையில் சிக்கி அதன்பின் அவர்களுடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

அதன்பின் தனிமையில் இருந்த நயனுக்கு ஆறுதலாக இருந்துள்ளார் விக்னேஷ் சிவன். இருவரும் அதன்பின்ன் காதலித்து ஜோடிகளாக ஊர்சுற்றி வந்தனர். எப்போது இருவருக்கும் திருமணம் என்று 5 ஆண்டுகளாக கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையை செய்துள்ளனர். அங்கு சென்னை மேயரை சந்தித்து பேசியும் உள்ளார்கள்.

கோவிலுக்கு சென்றப்பின் இரவு இருவருக்கும் எளிய முறையில் நிச்சயம் நடைபெறவுள்ளதாகவும் இருவரின் குடும்பத்தினரின் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.