அந்த விசயத்தில் நயன்தாரா அப்படிப்பட்டவரே இல்லை!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..
லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கரம் பிடித்தார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
இந்த விசயம் பிரச்சனையாகிய நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது படத்தினை இயக்கும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது. ஆனால் கதைக்காக லைக்கா மற்றும் அஜித் சிலவற்றை மாற்றக்கூறியிருக்கிறார்கள். ஆனால் அதை கொஞ்சம் கூட மாற்றாமல் கதை சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார்.

கோபப்படும் ஆள் இல்லை
கதையை கேட்டு கடுப்பாகிய அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் 62 வது படத்தில் இருந்து ஒதுக்கிவிட்டது. இந்த வாய்ப்பு நயன் தாராவின் சிபாரிசால் கிடைத்ததால், லேடி சூப்பர் ஸ்டார் கெஞ்சியும் விக்னேஷ் சிவனை விரட்டி விட்டுள்ளது.
இதனால் கோபத்தில் இனிமேல் அஜித் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் உண்மையில் நயன் தாரா அப்படி முடிவெடுக்கும் குணம் கொண்டவர் அல்ல.

ஒரு வாய்ப்புக்காக அஜித்திடம் கோபப்படும் ஆள் இல்லை என்றும் கதை பிடிக்கவில்லை என்றால் இயக்குனர்களை மாற்றுவது என்பது சகஜம் தான் என்று நயன் ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தினை பிடிக்க நயன் பல கதைகளை தேர்வு செய்வதில் கவனம் கொடுத்ததால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அதுபற்றி அவருக்கு நன்றாகவே தெரியும் என்பது அஜித் மீது எந்த பகையும் இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி வருகிறார்கள்.