நயன்தாராவின் குழந்தையா இது!! கணவர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது ஜவான் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்தப்பின் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். இந்த விசயம் முதல் விக்கி - நயன் ஜோடிகள் எது எடுத்தாலும் பிரச்சனைகளாகவும் வதந்திகளாகவும் மாறி வருகிறது.

சமீபத்தில் கூட விக்னேஷ் சிவனை நயன் தாரா விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி செய்தி இரண்டாம் முறையாக பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயன் தன் கணவருடன் ஜோடியாக மும்பை விமானநிலையத்தில் இறங்கி ஹூட்டிங்கிற்கு சென்றார்.
இந்நிலையில் நயன் தாராவின் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வளர்ந்து இரு வயதாகி இருக்கும் அந்த குழந்தை நயன் தாராவின் குழந்தை இப்படியா வளர்ந்துட்டாங்க என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
Nayan - Vikki Family! pic.twitter.com/TtRLMoqNnE
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 8, 2023