2-ஆம் திருமணத்திற்கு தயாராகிய நயன் தாரா.. மூன்றாவது முறையாக தாலி கட்டப்போகும் கணவர்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் நானும் ரவுடி தான் படத்தினை இயக்கி மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றார். அதன்பின் பாடலாசிரியராகவும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எழுதியும் வந்தார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா திருமண தோஷம்
நானும் ரவுடி தான் படத்தினை இயக்கிய போது அப்போது காதல் தோல்வியில் மன உளைச்சளில் இருந்த நடிகை நயன் தாராவுக்கு ஆறுதலாக இருந்து பின் காதலராக மாறினார். சுமார் 7 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த நயன் தாராவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை நயன் தாராவிற்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறியிருக்கிறார். அதனால் திருமணத்திற்கு முன் பூஜை செய்து பரிகாரம் செய்ய வாழை மரத்திற்கு முதல் முறை தாலி கட்டியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
பின் பிரம்மாண்ட முறையில் நல்ல நேரம் பார்த்து திருமணத்தை முடித்தார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் நயன் தாரா - விக்னேஷ் சிவனும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
பரிகாரம்
இதனால் தம்பதியினர் ஜோதிடரை சந்தித்து பரிகாரம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஜோதிடம் மீண்டும் திருமணம் செய்யக்கோரி பரிகாரம் செய்யச் சொல்லி இருக்கிறார். இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மூன்றாம் முறையாக தாலி கட்டவுள்ளார் என்றும் நயன் தாரா இரண்டாம் திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளது.
ஆனால் இது முற்றிலும் வதந்தி என கூறப்படுகிறது. நயன்தாரா குறித்து பல வதந்திகள் பரவி வருவதால் இதுவும் நம்பமுடியாத வதந்தி என்று கூறி வருகிறார்கள்.