கணவருடன் ஹனிமூன் எங்க போறீங்க? எல்லைமீறிய கேள்விக்கு இப்படியொரு ரியாக்ஷன் கொடுத்த நயன்தாரா

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 11, 2022 11:20 AM GMT
Report

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. எல்லாம் திட்டமிட்ட படி பாதுகாப்போடு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பல நட்சத்திரங்கள், உறவினர்கள் முன்னிலையில் நயன் தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

திருமணத்தின் முழு வீடியோ தொகுப்பினை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க நெல்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடியில் கைப்பற்றியது. திருமணத்திற்கு அடுத்த நாள் புதுமணத்தம்பதியினர் விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் பெற்றனர்.

இதையடுத்து இன்று காலை அனைத்து பத்திரிக்கையாளர்களையும் சந்தித்துள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன் தாரா. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு வந்து பேசியுள்ளனர்.

அனைவருக்கும் நன்றி இனிமேல் எங்களின் சினிமா கெரியரில் எடுக்கும் அனைத்து பணிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கூறி இருவரும் கிளம்பினர்.

அதில் ஒரு பத்திரிக்கையாளர் ஹனிமூன் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சிரித்தபடியே எதுவும் பதில் கூறாமல் சென்றுள்ளார் நயன் தாரா.