திருமணம் செய்றதே பெரிய டிரீட்! இதுல ஹனிமூனா! விக்னேஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த நயன் தாரா..

Nayanthara Vignesh Shivan
By Edward May 10, 2022 03:22 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் வருபவர் நடிகை நயன் தாரா. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து தன் ஆசை காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, விஜய் சேதுபதியுடன் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்திற்கு பிறகு நயன் தாரா ஷாருக்கான் அட்லீ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறாராம். கடந்த பல வருடங்களாக ஜோடியா ஊர் சுற்றி வந்த விக்னேஷ் சிவன், நயன் தாரா எப்போது கல்யாணம் செய்வார் என்ற ஏக்கத்திலேயே இருந்து வருகிறார்.

அடுத்தடுத்த கால்ஷீட் காரணமாக இருவரும் பிஸியாக இருந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதி சன்னிதானத்தில் திருமணம் நடைபெறவுள்ளது என்று செய்திகள் வெளியானது.

இதனால் இருவரும் மிகந்த மகிழ்ச்சியுடன் இணையத்தில் இணைந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே62 படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் ஆர்வம் காட்டப்போவதாகவும் நயன் தாரா கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறாராம்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன் உடல் எடையை குறைத்து முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்ட வயதாகிய நடிகை என்ற விமர்சனங்களை பெற்று வருகிறார். இதனால் தான் அந்த சிகிச்சை பெறவுள்ளாராம்.

மேலும் ஏகே 62 படத்திற்காக நயன் தாரா தயாராக வேண்டும் என்பதற்காகவும் அதற்காக இருவரும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நயன் தாரா கூறியிருக்கிறாராம்.

இதனால் திருமணத்திற்கு பிறகு ஹனிமூனை தள்ளி வைத்துள்ளார்களாம். எப்பவும் பறந்து கொண்டு தான் சுற்றி வருகிறீர்கள் இதுல ஹனிமூன் எதுக்கு என்று ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.