விஜய் சேதுபதியுடன் முத்தக்காட்சியால் சைக்கோவாக மாறிய இயக்குனர்! நயனால் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட அவமானம்

Vijay Sethupathi Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward Apr 28, 2022 12:01 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தென்னிந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறார்.

சமீபத்தில் தான் காதலித்து வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி சில தினங்களுக்கு முன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வந்தார். படத்தில் எனக்கும் நயன் தாராவிற்கும் முத்தக்காட்சி வைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அக்காட்சியை இயக்கும் போது விக்னேஷ் சிவன் நயன் தாராவிடம் இன்னும் குளோசா வாங்க என்று கூறிக்கொண்டே இருந்தார். பொருமையை இழந்த நயன் தரா சீ போடா சைக்கோ என்று திட்டிவிட்டு வெளியேறிவிட்டாராம். இதேபோல் விஜய் சேதுபதியும் வேற ஹீரோவை வைத்து பண்ணுங்கன்னு கூறியுள்ளாராம்.

திருமணம் செய்யப்போகும் நிலையில் இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியை கொடுத்திருந்ததாம். இதனால் விக்னேஷ் சிவன் அந்த காட்சியை வேண்டாம் என்று நீக்கி விட்டாராம்.