சூர்யாவுக்காக ஜோதிகா செஞ்சதை போல் ? விக்னேஷ் சிவனுக்காக அந்த விசயத்தை செய்த நயன்தாரா..
காதலுக்காக சாதி, மதம் என்று எதுவும் பார்க்கமாட்டார்கள் என்று கூறுவார்கள். அப்படி நட்சத்திரங்கள் தங்களின் காதலுக்காக மதம், சாதியை பார்க்காமல் திருமணம் செய்து கொள்வார்கள்.
அந்தவகையில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பு பிறப்பில் முஸ்லிம் பெண்ணாக இருந்தவர். சுந்தர் சி-ஐ காதலித்து இந்து முறைபடி கல்யாணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் மகிழ்ச்சியுடன் இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இதேபோல் நடிகை ஜோதிகா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் 4 வருடங்கள் காத்திருப்புக்கு பின் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் பெண்ணாக வளர்ந்த ஜோதிகா சூர்யாவுக்காக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
ஆர்ம்பத்தில் சூர்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து பின் அவர்களின் சந்தோஷத்திற்காக திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த வரிசையில் நடிகை நயன் தாராவும் சேர்ந்துள்ளார். கிறிஸ்தவ பெண்ணாக பிறந்து வளர்ந்த் நயன் தாரா பிரபு தேவாவுக்காக இந்துவாகவும் மாற முன்வந்தார். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர்.
தற்போது 7 வருட காத்திருப்புக்கு பிறகு ஆசையோடு காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
கிறித்துவமுறையா? இந்துமுறையா? என்ற கேள்வி எழுந்தநிலையில் மகாபலிப்புரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் நயன் தாரா.விக்னேஷ் சிவன் மீது அளவுக்கடந்த காதல் திருமண புகைப்படங்கள் மூலம் காண்பித்திருக்கிறது.