எனக்கு தெரியாம அந்த இடத்தை ஜூம் பண்ணி எடுத்துடாங்க!.. தனுஷ் படத்தில் நஸ்ரியாவிற்கு நடந்த அநீதி
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமா வலம் வந்த நஸ்ரியா. கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா எனப் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். பிஸி நடிகையாக இருந்த நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நய்யாண்டி படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் நஸ்ரியாவின் இடுப்பை க்ளோசப் வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு நஸ்ரியா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ஆனால் இயக்குனர் வேறொரு பெண்ணை வைத்து இந்த இடுப்பு காட்சியை படமாக்கி விட்டனர்.
இந்த திரைப்படம் வெளியான போது நஸ்ரியா இடுப்பை காட்டி நடித்து விட்டார் என்று பல பத்திரிகைகளில் வெளியானது. இதனால் கோபம் அடைந்த நஸ்ரியா இயக்குனர் மீது குற்றம் சாட்டினார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.
தற்போது வரை நஸ்ரியாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.