முஸ்லீமா இருந்துட்டு எப்படி இப்படி நடிச்சீங்க! முகம் சுளிக்கும் கேள்விக்கு பதிலடி கொடுத்த நஸ்ரியா
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் அறிமுகமாவது சகஜமான ஒன்று தான் அப்படி மலையாள பெண்ணாக நேரம் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்றார் நடிகை நஸ்ரியா ஷரின்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து மாட் டேட் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இதையடுத்து இயக்குனர் அட்லீயின் ராஜா ராணி படத்தில் ஆர்யாவின் காதலியாக நடித்து மக்கள் மனதை ஈர்த்தார்.
பின் நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு தன்னுடைய 21வது வயதில் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரான்ஸ் என்ற படத்தில் கணவர் பகத் பாசிலுடன் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது மீண்டும் மற்ற நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆயத்தமாகி நடிகர் நானியின் அண்டே சுந்தரனிக்கி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
அதில் பத்திரிக்கையாளர் ஒருவர், ஒரு முஸ்லீம் நடிகையாக இருந்து கொண்டு படத்தில் கிறிஸ்த்தவ பெண்ணாக நடித்து இந்து ஆணை திருமணம் செய்யும் காட்சியில் நடித்தது எப்படி இருந்தது என்று கேட்டிருந்தார்.
அதற்கு நஸ்ரியா, இயக்குனர் என்னிடம் கதை சொன்ன விதம் அப்பவே பிடித்திருந்தது. கதை எனக்கு ஒரு ஸ்பார்க்கினை கொடுத்தது என தெரிவித்தார். இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.