நான் கைக்கூலியா..என் காசுல உதவுற!! KPY பாலா பதிலடி வீடியோ..
KPY பாலா
பிரபல தொலைக்காட்சி சேனலில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த KPY பாலா, தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பை தாண்டி பல உதவிகளை செய்து வரும் KPY பாலாவை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் பாலா பற்றி பலரும் அவர் ஏமாற்றுகிறார் என்று கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். ஆம்புலன்ஸ் எண்ணை ஏன் மறைத்து கொடுக்கிறார், அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வருகிறது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். இதைகேள்விப்பட்ட பாலா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நான் கைக்கூலியா
அதில், என்ன சர்வதேச கைக்கூலி என்கிறார்கள். நான் சொந்தமாக சம்பாதிக்கும் பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறேன். என்னுடைய கால் கிரவுண்ட் நிலத்தில் முன்னால் கால் கிரவுண்ட் வாங்கி மொத்தம் அரை கிரவுண்ட் நிலத்தில் கிளினிக் தான் வைக்கப்போகிறேன். அதுவும் என் வீட்டுக்கு பக்கத்தில் தான்.
காரும் சொகுசு பங்களாவும் கட்டி இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காது என்று சொன்னார்கள். அடுக்குமாடி வீட்டுக்கு பதிலாக ஹாஸ்பிட்டலும், ஆடம்பர காருக்கு பதிலாக ஆம்புலன்ஸும் வாங்க நினைத்தால் எனக்கு இவ்வளவு நெருக்கடி வருகிறது.
இதனால் நான் தளரபோவதில்லை. எனக்காக இருக்கும் மக்களுக்காக நான் தொடர்ந்து ஓடுவேன் என்று பாலா அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.