அரைநாள் ஷூட்டுக்கு அழைத்த இயக்குனர்!! நடிகை நீலிமா ராணி சொன்ன உண்மை..

Neelima Rani August 16 1947
By Edward Apr 10, 2023 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் அண்ணி, தங்கை, அக்கா கதாபாத்திரங்களில் நடித்தும் சீரியலில் வில்லியாகவும் நடித்த பிரபலமானவர் நீலிமா ராணி.

சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். படத்தில் நடிக்க இயக்குனர் தன்னை அழைத்த விதத்தை பற்றி கூறியிருக்கிறார் நடிகை நீலிமா.

முக்கிய கதாபாத்திரம் என்றும் மக்கள் உங்களை பற்றி அதிகமாக பேசுவார்கள் என்றும் கூறினார். எத்தனை நாள் டேட் வேண்டும் என்று கேட்டதற்கு அரைநாள் மட்டும் போதும் என தெரிவித்தார்.

அவர் அப்படி சொன்னது அரைநாளில் என்னை வைத்து என்ன எடுக்கப்போகிறார் என்று குழப்பத்தில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் கெளதம் கார்த்தியின் குழந்தை பருவ அம்மாவாக நடித்திருக்கிறார் நீலிமா. அப்படி படத்தின் ஷூட்டிங்கின் போது 5 ந்மிடம் வந்தாலும் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என நீலிமா தெரிவித்துள்ளார்.