குறைமாதத்தில் பிறந்த குழந்தை!! நீயா நானா-வில் உருக வைத்த தம்பதியினர்...

Viral Video Star Vijay Gopinath Chandran Neeya Naana
By Edward Jul 13, 2025 06:30 AM GMT
Report

நீயா நானா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கடந்த 23 சீசன்களாக மிகப்பெரிய ஆதரவை பெற்றும் நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா நிகழ்ச்சி தான். தொகுப்பாளர் கோபிநாத்-ஆல் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் பல தலைப்புகளின் கீழ் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாரம் எபிசோட்டில், கணவர் மனைவி கலந்து கொண்டு, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஞாபகம் இருக்கா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தை!! நீயா நானா-வில் உருக வைத்த தம்பதியினர்... | Neeya Naana Emotional Video Husband Wife Pain

குறைமாதத்தில் பிறந்த குழந்தை

அப்போது ஒரு பெண், எனக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க, பொறுப்பா இருக்கமாட்டாங்க, என்னுடைய கர்ப்பகாலத்தில் அவர் பொறுப்பா இருந்திருந்தால் இரண்டு பேரும் கஷ்டப்பட்டு இருக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர், நான் வேண்டும் என்றே செய்யவில்லை, என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனை கேட்ட மனைவி நீ வேண்டுமென்றே செய்யவில்லை என்று தெரியும், நீ மாறணும் தான் சொல்றேன்.

குழந்தை குறைமாதத்தில் பிறந்தது என்று கணவரை கட்டியணைந்து ஆறுதல் சொல்லியுள்ளார். இதை பார்த்த கோபிநாத் உட்பல பலரும் மனமுடைந்து அழுதுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.