ஆபாசமா பேசுறாங்க..வீடியோ காலில்..அதுவும் கேவலமா! நீனா நானா உமா கண்ணீர்..

Gossip Today Tamil TV Shows Neeya Naana
By Jai Aug 13, 2026 02:45 PM GMT
Report

நீனா நானா உமா

கன்னியாக்குமரியை சேர்ந்த உமா என்பவர் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார். சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது, வயதானவர், ஆதவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது. ஆதவற்ற நிலையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது என பல வழிகளில் சேவை செய்து வருகிறார். தான் சம்பாதித்த பணத்தில் பாதியை வைத்தும், மற்றவர்களிடம் உதவி கேட்டு, பணம் பெற்று உதவி செய்து வருகிறார். அதற்காக சோசியல் மீடியாவில் தொலைபேசி எண்ணையும் பகிர்ந்திருக்கிறார்.

ஆபாசமா பேசுறாங்க..வீடியோ காலில்..அதுவும் கேவலமா! நீனா நானா உமா கண்ணீர்.. | Neeya Naana Uma About Celebrity Tears]

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமூக சேவை செய்பவர்கள், அதனால் வீட்டில் இருப்பவர்கள் படும் கஷ்டம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது உமாவின் மகன்கள் கோபிநாத்திடம், என் அம்மா என் பிறந்தநாள் அன்று எனக்காக எதுவும் செய்யாமல் தெருவில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு போடணும் என்று கிளம்பிட்டாங்க, அன்னைக்கு முந்தைய நாள் தான் அம்மாவே ஹாஸ்பிடல்ல இருந்தாங்க, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் அடுத்த நாளே அவங்க இப்படி போனது எனக்கு ரொம்ப வருத்தம். அன்னைக்கு நாள் முழுக்க நான் அம்மா எனக்காக வாழ்த்து சொல்ல வருவாங்கன்னு காத்திருந்தேன் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

அதற்கு உமா, நான் பலரிடம் பிச்சை வாங்கி இல்லாதவர்களுக்கு சமைத்து கொடுத்து வருகிறேன். அப்படி வாங்கி வைத்த காய்கறிகளும், சாப்பாடு பொருட்களும் வீட்டில் இருக்கும்போது அதை வைத்துக்கொண்டு நான் எப்படி என் மகனுடன் சந்தோஷமாக இருக்க முடியும், அதை சமைத்து இல்லாதவர்களுக்கு கொடுத்தால்தானே காசு கொடுத்தவர்கள் மனம் சந்தோஷப்படும், அதனால் தான் நான் அப்படி செய்தேன் என்று கூறினார்.

ஆபாசமா பேசுறாங்க

அப்படி பேசிய உமா, சோசியல் மீடியாவில் கதறி அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு தொடர்ந்து ஆபாச தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் சிலர் வீடியோ காலில் எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். என்னை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் எப்படி ஆபாசமாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது என எனக்கே புரியவில்லை, நான் ஒரு அம்மா, என் பையன் வயது இருக்கும் இளைஞர்கள் கூட எனக்கு ஆபாசமாக வீடியோகள் அனுப்புகிறார்கள். இது போன்ற செயல்கள் எனக்கு மிகுந்த மனவேதனையை கொடுப்பதாக வீடியோவில் கூறியிருக்கிறார் உமா.