ஒருநாள் ரெமோ..இன்னொரு நாள் அந்நியன்!! நார்ஸிஸ்ட் காதல் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன்..
அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேட்டியொன்றில் தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து பேசிய விஷயம் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அதில், நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மை கஷ்டப்படுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்திருக்கிறேன். ஆனால் இது வன்முறை தான் என்பதை அறியவே நீண்டகாலம் ஆகிவிட்டது.
அந்த சமயத்தில் தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு என் உடல் எடையை குறைத்தேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பின் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டங்களும் உள்ளன.
முழுமையாக குணமடைந்தப்பின் அதை பற்றிப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். முதலில் நார்ஸிஸ்ட் அபியூஸ் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை காதலிக்கும் நபர் மெல்லமெல்ல உங்களின் பலவீனங்களை அறிந்துகொண்டு அதை அன்புடன் தொடர்புப்படுத்தி உளவியல் ரீதியாக உங்களை ஆளத் தொடங்குவார்கள்.
வெளிப்படையாக இப்படி இரு, அப்படி இரு என்று சொல்லாமல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்களை மாற்றுவதில் மிகுந்த நிபுணர்களாக இருப்பார்கள்.
நார்ஸிஸ்ட் காதல்
உதாரணமாக, ஒருமுறை நான் சுடிதார் அணிந்தபோது அவர், நீ ரொம்ப அழகா இருக்க, இப்போதுதான் மனைவியாகத் தோன்றுகிறது என்றார். நான் சுடிதார்ககளை வாங்கிக் குவித்தேன்.
பின், உணவு மேஜையில் அரட்டையடித்து பேசிச் சாப்பிடும் என்னிடம், நீ அப்போது அமைதுயாக இருந்தது நன்றாக இருந்தது என்றார், உடனே அவர் என் அமைதியை விரும்புகிறார் என்று நான் உணவு மேஜையில் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

பின் கை ஸ்லீவ்லஸ் ஆடையணிந்தபோது வெளியே மிகவும் வெப்பமாக இருக்கிறது, இதனை அணிய வேண்டுமா? என்று கேட்க, நான் அய்யோ என் மீது எவ்வளவு அக்கறையா என்று அதனை தவிர்த்தேன்.
தொடர்ந்து, இன்று என்ன ஆடையணிகிறாய் என்பதை கேட்டதால், நான் அதனை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பேன். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்தாலும், இது சரியாக இருக்கிறது என்று நினைக்கிறாயா என்று கேட்டு உளவியலாக சிந்திக்க வைத்து பதிவை டெலீட் செய்ய வைப்பார்.
நினைத்து பாருங்கள் ஒருநாள் ரெமோ, அப்படியிரு காதல், நாம் மிகவும் கொடுத்து வைத்த ஆள் என்கிறளவுக்கு கனவுகள் தளிரும். அடுத்தநாள் அந்நியனாக மாறிவிடுவார். மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும் பின் அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார்.

நடிகை மடோனா செபாஸ்டியன், தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசியபோதுதான், நாமும் இப்படியான சூழலில் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.
காதல் ஆரம்பித்த 3 மாதத்திலேயே அந்த நபரின் குடும்பத்தில் அறிமுகப்படுத்தி, திருமணம், நிச்சயதார்த்தம் தொடர்பான பேச்சுகள் தொடங்கியது. நிச்சதார்த்ததை எங்கு நடந்த்துவது, எத்தனை பேர் கலந்து கொள்வது என பேசப்பட்டது. ஆனால் அந்த நிச்சயத்தை பலமுறை நான் தள்ளிப்போட்டேன்.
இது சரியான நேரம் இல்லை, இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளலாம். இருவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி யோசிக்க போதுமான வயதும், காலமும் இருப்பதாக கூறினேன். மேலும் பணத்திற்காக மட்டுமே அந்த உறவில் இருந்திருந்தால், நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கான எந்த காரணமும் எனக்கு இருந்திருக்காது என்று தன்னுடைய நார்ஸிஸ்ட் காதல் குறித்து பகிர்ந்துள்ளார்.