நீங்களா என்னடா சொல்றது! சூப்பர்ஸ்டாருக்கு அடுத்து மருமகன் தனுஷ் பக்கம் சாயும் நெல்சன்..

Dhanush Rajinikanth
By Edward Apr 23, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா, யோகி பாபு நடித்து நல்ல வரவேற்பு கொடுத்த படம் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார் நெல்சன்.

படம் வெளியாவதற்கு முன்பே நெல்சனின் திறமையை அறிந்த நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இதன்படி இப்படம் உருவாகி கடந்த 13 ஆம் தேதி வெளியாகியது. எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியேன இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

கலவையான விமர்சனத்தால் அடுத்து சூப்பர் ஸ்டாருடன் இணையும் வாய்ப்பு நெல்சனுக்கு மதில் மேல் பூனை கதையாகவே இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் நான் இருக்கேன் நாம பண்றோம் என்று கடிவாளம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் தலைவர் 169 படத்தினை இயக்கியப்பின் நெல்சன் நடிகர் தனுஷ் பக்கம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

நானே வருவேன், திருச்சிற்றம்பலம், பாலிவுட்டில் மூன்று படம், ஹாலிவுட் படம் என பிஸியாக இருக்கும் தனுஷ் இரு வருடங்களுக்கு பிறகு நெல்சனுடன் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.