சிம்புவால் சினிமா வாழ்க்கையே தொலைத்த நெல்சன்? ஸ்டுடியோவிலே படுக்கவைத்து தூக்கிவிட்ட அனிரூத்..

simbu nelson anirudh beast vettaimannan
By Edward Apr 19, 2022 06:11 AM GMT
Report

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் பீஸ்ட். சன்பிச்சர்ஸ் தயாரிப்பில் பல நட்சத்திரங்களில் நடித்து பல எதிர்ப்பார்ப்புகளுடன் ஒளிப்பாரப்பாகி வருகிறது.

படம் ரிலீஸான சில காட்சிகளில் படம் சுமார் தான் என்றும் எதிர் விம்சனத்தையும் பெற்று வந்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் வேட்டையாடி தான் வருகிறது பீஸ்ட் படம்.

இப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் தலைவர் 169ஐ இயக்கவுள்ளார் நெல்சன். பீஸ்ட் விமர்சனத்தால் தன் சினிமாவாழ்க்கையே போய்விடும் என்ற பயத்தில் இருந்து வருகிறார் நெல்சன் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு முன் நெல்சனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன்மூலம் எப்படியாவது வெள்ளித்திரையில் ஒரு படத்தினையாவது இயக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து வந்தாராம் நெல்சன்.

அப்படியொரு வாய்ப்பு சிம்புவால் கிடைத்தது. வேட்டை மன்னன் என்ற படத்தினை 2016ஆம் ஆண்டு சிம்பு, ஜெய், ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இயக்க ஆரம்பித்தார்.

ஆனால் சில காரணங்களால் இப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது. நிதி நெருக்கடியால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தது தான் இதற்கு முழு காரணம் என்று கூறப்பட்டது.

இதனால் அப்செட்டில் இருந்த நெல்சனுக்கு ஆதரவாக இருந்தார் இசையமைப்பாளர் அனிரூத். மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றபோது அனிரூத் அலுவலகத்தில் தான் நெல்சன் தங்கியிருந்தாராம். அப்போது நெல்சனை ஊக்குவிக்க அனிரூத் லைக்கா நிறுவனத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்மூலம் உருவான கதைதான் கோலமாவு கோகிலா. நயன் தாரா, யோகிபாபுவைத்து எடுத்த இப்படம் நல்ல வரவேற்பு பெற்றார். அனிரூத்தின் நட்பு தான் இப்போது வரையில் நெல்சனுக்கு ஆறுதலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.