என்னது, அது நெல்சன் கதையே இல்லையா? பெருமை படாதீங்க நெல்சன்..
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாகடர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கி அதன் மூலம் மிகப்பெரிய இடத்தில் நிற்பவர் இயக்குனர் நெல்சன். பீஸ்ட் படத்தின் படமே இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில் நெல்சனின் மார்க்கெட் அதிகரிக்க உடனே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் புக் செய்துள்ளார்.
தலைவரின் 169 வது படம் யார் இயக்குவார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் நெல்சன் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிரூத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் கதையை நெல்சன் கூறிய போது கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லையாம்.
அதன் ரஜினி வேறொரு கதையை கொடுத்து அவுட்லைன் மற்றும் மாற்றி டெவலப் செய்யுங்கள் என்று கூறியுள்ளாராம். அதற்காக ரஜினியி போயஸ் கார்டனுக்கு பக்கத்திலேயே ஒரு பிளாட் வாங்கி தங்கி இருக்கிறாராம் நெல்சன்.
ரஜினி வீட்டிற்கு பக்கத்திலேயே போயஸ் கார்டனில் ரூம் போட்டு அங்கேயே தங்கியுள்ளாராம் நெல்சன். ஒருவேளை ரூம் போட்டு யோசிக்கிறாரோ நெல்சன் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.