கமல் பேசுறதே புரியல.. நெல்சன் இப்படி சொல்லிட்டாரே!!
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது இதில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்சன், இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நடந்தது. அந்த சமயத்தில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வேலை செய்துகொண்டு இருந்தேன்.
பிக் பாஸில் பணியாற்றும் போது
அவருடன் நெருக்கமாக இருந்தேன். ஒரு முறை என்னை கமல் சார் திட்டிவிட்டார். அவரிடம் திட்டு வாங்கியதே ரொம்ப பெருமையாக கருதினேன்.
நான் கோலமாவு கோகிலா படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் கமல் சாரிடம் பேசினேன். அவர் டெக்னிக்கல பேசினார். அவர் என்ன பேசினார் என்பது புரியவில்லை. இருந்தாலும் அவர் பேசுவதை பார்த்துக்கொண்டே இருப்பேன். கடைசியில் நீங்கள் பேசுவது எதுவுமே புரியவில்லை என்று சொன்னேன், உனக்கு புரியலனு எனக்கும் தெரியும் என்று ஜாலியாக கமல் சொன்னார் என்று நெல்சன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.