விஜய் பேட்டியால் மொக்கை வாங்கும் நெல்சன்! தொகுப்பாளர் வேலையெல்லாம் நமக்கு தேவையா..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெளியீட்டு வெற்றிக்காக காத்திருக்கிறார். ஏப்ரல் 13ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக சன் பிச்சர்ஸ் நிறுவனம் எந்தவொரு செயலையும் செய்யாது வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
அதை நிரப்ப நடிகர் விஜய்யை வைத்து பேட்டி எடுக்க முடிவெடுத்துள்ளது. 1 மணிநேரத்திற்கு விஜய்யை பைத்து இயக்குனர் நெல்சன் பேட்டியெடுப்பது தான். விஜய்யுடன் நேருக்கு நேர் என பெயரிடப்பட்ட நிகழ்ச்சி வரும் 10 ஆம்தேதி ஒளிப்பாரப்பாகவுள்ளது.
இந்நிலையில் நெல்சன் விஜய்யை பேட்டி காண்படதை வைத்து நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள். வேறொரு ஆங்கர் அல்லது நடிகரை வைத்து பேட்டி கண்டிருக்கலாம். இயக்குனருக்கு பல விஷயங்கள் கேட்கக்கூடாததாக இருக்கும்.
அப்படி விஜய்யிடம் அதை கேட்டிருப்பாரா கேட்கும் மன பாங்கு இருக்குமா என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த வீடியோவையும் தியேட்டரில் போட்டுடாதீங்க என்று கூறியும் வருகிறார்கள்.
நெல்சன் எதற்கு பேட்டியெடுத்தார் என்ற கேள்விக்கு நெல்சன் இயக்குனராவதற்கு முன் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதால் சன் பிச்சர்ஸ் நிறுவனம் நெல்சனை தேர்ந்தெடுத்துள்ளதாம்.

