வாய்ப்பு கொடுத்த நடிகையின் திருமணம்!! தலைக்காட்ட முடியாமல் தவிக்கும் இயக்குனர்?
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் கோலமாவு கோகிலா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி பின் சிம்புவை வைத்து எடுக்க ஆரம்பித்த படமான வேட்டை மன்னன் நிறுத்தப்பட்டது.
தன்னுடைய முதல் படம் பிளாப்பாகினாலும் நயன் தாரா கொடுத்த வாய்ப்பினால் சினிமாவில் இப்படத்தின் மூலம் அனைவரால் அறியப்பட்டவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தினை இயக்கினார், படமும் வெற்றிப்பெற்று 100 கோடி வசூலுக்கு மேல் எடுத்தது.
இப்படத்தினால் விஜய்யுடன் பீஸ்ட் படத்தினை இயக்கினார். லாஜிக் மீரல்களால் சொதப்பிய இப்படத்தினால் விஜய் அடிவாங்கியதை விட மிகப்பெரியளவில் நெல்சன் அங்கும் இங்குமாக அடிவாங்கி தலைக்காட்ட முடியாமல் திணறினார்.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் கூட ஏற்கனவே நொந்து போகும் அளவிற்கு செய்றாங்க என்று ஓப்பனாகவே கூறினார். இப்படியிருக்கையில் தனக்கு வாய்ப்பு கொடுத்த நயன் தாராவின் திருமணத்திற்கே செல்லாமல் இருந்துள்ளார் நெல்சன்.
அழைப்பு விடுக்கப்பட்டும் ஏன் நெல்சன் வரவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். பீஸ்ட் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் சூப்பர் ஸ்டார் படத்திற்கும் நடக்க கூடாது என்று பலர் கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.