ரஜினி 5 மாசம் பொருங்க! அங்க போய்ட்டு வர்றேனு அவகாசம் கேட்கும் இயக்குனர்..
nelson
anirudh
superstar
rajinikanth
beast
thalaivar169
By Edward
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு யார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது. பல இயக்குனர்கள் ரஜினி சந்தித்து கால் செய்து பேசியும் வந்துள்ளனர்.
அப்படி பிஸி கால்ஷீட்டை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்த ரஜினி டாக்டர், பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமாரை புக் செய்துள்ளார். தலைவர் 169ன் அதிகாரப்பூர்வ தகவல் வீடியோவாக வெளியானது.
இந்நிலையில், ரஜினியிடம் 5 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளாராம் நெல்சன். அதற்கு காரணம் கதையை ஒழுங்காக அமைத்து வர வேண்டியிருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கிடைக்கிற கேப்புல இமயமலையா? அமெரிக்காவா? என்று ரஜினி யோசிப்பாரே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.