என்ன நெல்சா உனக்கே இப்படியா? நொந்துபோன பீஸ்ட் பட இயக்குனரை மாட்டிவிட்ட நடிகை

Vijay Lokesh Kanagaraj Nelson Dilipkumar Pooja Hegde
By Edward Jun 11, 2022 05:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தின் ஹிட்டை கொடுத்தார். 

டாக்டர் படம் வெளியாகும் முன்பே நடிகர் விக்ஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்க கமிட்டாகினார். அதன்பின் பீஸ்ட் படம் இயக்கி முடித்து வெளியாகியது. இப்படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் பல பேட்டிகளில் கலந்து கொண்டு ஓவராக பேசியது பீஸ்ட் படம் ஏமாற்றத்தை கொடுத்தது.

படத்தின் பல காட்சியில் லாஜிக் மீரல்கள் அதிகளவில் இருந்ததை இணையத்தில் நெட்டிசன்கள் உள்ளிட்டவர்கள் கலாய்த்து வந்தனர். பீஸ்ட் படத்திற்குபிறகு வெளியான ஹிட் படங்களை வைத்து, எப்படி படம் பண்ணனும்னு நெல்சன் கத்துக்கோ என்று கூட கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தனியார் இணையதளம் வழங்கிய விருதுவிழாவில் நடனமாட நெல்சனை மேடைக்கு அழைத்துள்ளார். மேடைக்கு வந்த நெல்சனிடம் விஜே பிரியங்கா, நீங்க பெரிய டான்ஸ் மாஸ்டர்ன்னு சொல்றாங்களே என்று கூறியுள்ளார்.

அதற்கு நெல்சன் ஏற்கனவே நல்லா மாட்டிக்கொண்டு இருக்கேன் நான் சைலண்ட்டா உட்காருற என்று கூறியுள்ளார்.

மேலும் நெல்சனை ட்ரோல் செய்வதை பற்றி லோகேஷ் கூறியதையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.