சூப்பர் ஸ்டாரால் நெல்சனுக்கு வந்த சோதனை? முப்பதையும் தூக்கி எறிந்த ரஜினி

Rajinikanth Nelson Dilipkumar
By Edward Jun 15, 2022 11:20 AM GMT
Edward

Edward

Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி பின் லேடி சூப்பர் ஸ்டார், யோகி பாவுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குனராக அறிமுகமாகியவர் தான் இயக்குனர் நெல்சன்.

மெனக்கிடும் நெல்சன்

முதல் படமே சூப்பர்ஸ்டார் நடிகையை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த நெல்சன், இப்படத்தினை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தினை இயக்கினார். படம் 100 கோடியளவில் வசூல் சாதனை படைத்தது.

இதனால் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்க ஆரம்பித்து படமும் வெளியாகியது. லாஜிக் இல்லாத காட்சி ஸ்கிரிப்பில் சொதப்பல் என்று பல அடிகளை சந்தித்து வந்தார் நெல்சன். இதனால் எங்கும் செல்லாமல் போகிற இடமெல்லாம விமர்சனத்திற்கு ஆளாகினார்.

அப்படியிருக்கையில் தலைவர் 169 படத்தினை இயக்குவது பற்றி சந்தேக கேள்வி எழுந்த நிலையில் படமும் கன்பார்ம் ஆனாது. தற்போது படத்திற்காக முழு வீச்சில் வேலை செய்து கொண்டிருக்கிறாராம் நெல்சன்.

விக்ரமால் மிரண்டு போயிருக்கும் ரஜினி

விக்ரம் படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று இதைவிட பிரம்மாண்டம் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். இதனால் ரஜினிக்கு பிடித்தமான கதையை அமைத்து மெனக்கெட்டு வேலை செய்து வருகிறாராம்.

முப்பது டைட்டிலால் நொந்துபோன நெல்சன்

மேலும் படத்தின் டைட்டிலுக்காக 30 முறை கூறியிருக்கிறார் நெல்சன். அதில் ஒன்று கூட சூப்பர் ஸ்டாரை கவரவில்லையாம். இப்படியே போனால் கதையை எப்போது முடித்து எடுக்க போகிறாரோ என்று நெல்சனை பார்த்து புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.