விஜய் அவமானப்படுத்தினார்! அஜித் கொடுக்கல! நெப்போலியன் ஒதுக்க இதுதான் காரணம்..

ajith vijay valimai pokkiri Napoleon beast
By Edward Feb 16, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் 90களில் முரட்டு நடிகராக திகழ்ந்து வந்தவர் நெப்போலியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன் பல முன்னணி நடிகர்கள் படத்தில் வில்லனாகவும் இணைந்தும் நடித்து வந்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் போது தான் ஏன் அஜித் விஜய்யுடன் நடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். அஜித்துடன் நடிக்க வாய்ப்பு இன்னும் வரவில்லை.

கிடைத்தால் நான் வில்லனாகவும் பாசிடிங் கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க செல்வேன் என்று கூறியுள்ளார். நான் ஹீரோவாக நடித்த காலத்தில் வளர்ந்து வரும் நடிகராக அஜித் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விஜய்யுடன் போக்கிரி படத்தின் போது என்னை அவமானப்படுத்தியதால் மனஸ்தாபம் ஏற்பட்டது. சூழ்நிலையில் அவர் நடந்து கொண்ட விதமும் அவரின் சவகாசம் வேண்டாம் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவர் அதை தவிர்த்திருக்கலாம் என்று இயக்குனர் சீத்தா லட்சுமன் பேட்டியில் கூறியிருந்தார் நெப்போலியன்.