அமெரிக்கா வரை கெட்டுப்போன விஜய்யின் பெயர்!! தேரை இழுத்து தெருவில் விட்ட நடிகர்..
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியன். கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வந்த நெப்போலியன் சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

இதற்கிடையில் பேட்டிகளில் பேசி வரும் நெப்போலியன், விஜய்க்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் மீண்டும் அவருடன் நடிப்பீர்களா என்ற கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். ஏற்கனவே போக்கிரி படத்தின் போது தன்னை அவமானப்படுத்தினார் விஜய், அதனால் அவருடன் மன கசப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், 'நீங்களும் நடிகர் விஜய்யும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், "எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது.

அதன் பின்னர் 15 ஆண்டுகளாக நாங்கள் பேசிக்கொல்வத்தில்லை. நான் விஜய்யுடன் நடந்த பிரச்சனைகளை மறந்து மீணடும் இணைந்து நடிக்க தயார். அதற்கு அவரும் தயாராக இருப்பாரா?.
விஜய் தனது சொந்த அம்மா அப்பாவிடம் கூட பேசுவதில்லை. இந்த செய்தி அமெரிக்கா வரை வந்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் விஜய், அம்மா அப்பாவிடம் சமரசம் ஆகக்கட்டும்" என்று கூறியிருந்தார்.