படுதோல்வியடைந்த ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் படம்.. பல கோடி நஷ்டம்
Shankar Shanmugam
Aditi Shankar
Vishnuvardhan
By Kathick
இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் நேசிப்பாயா.
இப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருந்தார். காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.
பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது.
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 2 கோடிக்கும் மேல் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் என கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.