முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு விவரம்.. இதோ

Sivakarthikeyan Actors Net worth
By Kathick Feb 17, 2026 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக சேயோன் எனும் படம் உருவாகிறது. இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளிவந்துள்ளது. காரணம் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள். தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு விவரம்.. இதோ | Net Worth Details Of Sivakarthikeyan

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.