நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோவுக்கு முடிவு கட்டிய நெட்பிளிக்ஸ்.. உண்மையில் வெட்கப்பட்ட நயன்..

Nayanthara Vignesh Shivan Marriage Netflix
By Edward Aug 09, 2022 10:30 AM GMT
Edward

Edward

Report

நடிகை நயன்தாரா, காதலனை கரம்பிடிக்க கடந்த ஆண்டு பிளான் போடப்பட்டு அது தள்ளிப்போய் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் தாலி கட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். திருமணத்தின் வீடியோ கவரேஜை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடிக்கு விற்று காசு பார்க்க திட்டம் போட்டிருந்தார் நயன்தாரா.

ஆனால் விக்னேஷ் சிவன் திருமணத்தன்றே முக்கிய புகைப்படங்களை வெளியிட்டு விட்டார். இதனால் இனிமேல் வெளியாகும் புகைப்படங்கள் வீடியோக்கோ மதிப்பு இருக்காது என்று விக்னேஷ் சிவன் நயன்தாரா போட்ட ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிளிக்ஸ் விலகியதாக கூறப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோவுக்கு முடிவு கட்டிய நெட்பிளிக்ஸ்.. உண்மையில் வெட்கப்பட்ட நயன்.. | Netfflix Out Promo Video Nayan Vikki Marriage

இதனால் 25 கோடி போச்சே என்று நயன் தாரா, விக்னேஷ் மீது கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியான திருமணத்திற்கு முன் நயன் - விக்கி தங்கள் காதல் பற்றிய பகிர்ந்து கொண்டது முதல் திருமணம் வரையிலாக எடுத்த வீடியோ தொகுப்பினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமோவாக வெளியிட்டுள்ளது.

இருவருக்கும் சண்டை, பிரச்சனை, காசு போச்சே என்று பல வதந்தி செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த வீடியோ நயன் தாராவின் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

அதிலும் நயன் தாரா வெட்கப்பட்டு ரொமான்ஸ் செய்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.