18 வயதில் நடிகையானதும் கேவலமான ஆடிட்டியூட்!! நடிகை அனிகாவின் செயலை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Anikha Surendran
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report
135 Shares

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், நயன் தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் 2019ல் வெளியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் விஸ்வாசம். அப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டி நட்சத்திரமாக அஜித், திரிஷாவின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்து வந்தார் அனிகா.

விஸ்வாசம் படத்திற்கு பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா போகப்போக வயதானதும் கிளாமர் லுக்கில் மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

actress anikha surendran

அதன்பின் 17 வயதில் கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கமிட்டாகினார். சமீபத்தில் ஓ மை டார்லிங் படம் வெளியாகியது.

இப்படத்தில் எல்லைமீறி முத்தக்காட்சி படுக்கைகாட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது புட்ட பொம்மா படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அனிகா.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தன்னை பேச அழைத்த போது முகம் சுளித்த வண்ணம் ஸ்டைலாக மோசமான ஆடிட்டியூட் செய்துள்ளார். நடிகை நயன் தாரா கூட இப்படி எங்கும் நடந்து கொள்ளவில்லை இப்போது தான் கதாநாயகியான அனிகா இப்படி நடந்து கொள்கிறாரே என்று நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.