ஆலியாவின் திமீர் பேச்சால் கணவர் படத்துக்கு ஆப்பு.. நடுத்தெருக்கு தள்ளப்பட்ட பிரம்மாண்ட இயக்குனர்..

S. S. Rajamouli Alia Bhatt Ranbir Kapoor
By Edward Aug 24, 2022 02:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ரன்பீர் கபூர் சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா, ஆலியா பட், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பான் இந்தியா படமாக உருவாகி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பல நகரங்களுக்கு சென்று வருகிறார்கள் படக்குழுவினர். தற்போது ரன்பீர் கபூர், நாகர்ஜுனா, ராஜமவுலி சென்னையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரஸ் மீட்டிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆலியாவின் திமீர் பேச்சால் கணவர் படத்துக்கு ஆப்பு.. நடுத்தெருக்கு தள்ளப்பட்ட பிரம்மாண்ட இயக்குனர்.. | Netizens Angry Alia Bhatt For Controversy Speech

இந்நிலையில், நடிகை ஆலியா பட் என்னை பிடிக்கவில்லை என்றால் என்னுடைய படத்தை பார்க்காதீர்கள் என்று திமிராக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இப்படி ஆலியா பட் பேசியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் வெளியாகும் படங்கள் படுதோல்வியை தழுவி வருவதால் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் பாய்காட் என்ற ஹாஷ்டேக்கினை கிரியேட் செய்து டிரெண்ட்டாக்கி வந்தனர்.

தற்போது ஆலியா பட் பேசியதால் #BoycottBrahmastra என்ற ஹாஷ்டேக்கினை ரசிகர்கள் வைரலாகி எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.