கால்வாயில் மாட்டிகொண்ட எவர் கிவன் கப்பலை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்! அப்படி என்ன நடந்தது?

egypt suez canal Titanic evergreen
By Jon Mar 30, 2021 04:30 PM GMT
Report

ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகிதியையும், ஆசியா, ஆப்ரிக்கா பிரிக்கும் செங்கடல் பகுதியையும் இணைத்தப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டது சூயஸ் கால்வாய். இப்பகுதியில் பல கோடி மதிப்பிலான சரக்கு கப்பல்கள் கடல் வர்த்தக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது சூயஸ் கால்வாய்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி எவர் கிவன் என்ற ராட்சத சரக்குக்கப்பல் சூயஸ் கால்வாயை அடைந்தபோது கால்வாயை அடைத்தவாறு திவிர காற்றழுத்தத்தால் மாட்டிக்கொண்டது. இதனால் மற்ற சரக்கு கப்பல்கள் செல்லாதவாறு 70000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கடைந்தது. இது வெறும் ஒரு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்பாகும். ராட்சத கப்பல் சுமார் 400மீட்டர் நீளமும்(1313அடி), 59 மீட்டர் அகலமும் கொண்டு சுமார் 20000 கன்டெய்னர்களுடன் மலேசியா வழியாக நெதர்லாந்தின் ராட்டர்ட்டாமுக்கு செல்ல முற்ப்பட்டது.

சூயஸ் கால்வாயில் நுழைந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, பாதையை அடைத்தபடி சிக்கிக் கொண்டது. இதனால் சூயஸ் கால்வாய், பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி முற்றிலுமாக அடைபட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த உலகமும் பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. வர்த்தகம் மற்றும் கடல் பரிவர்த்தனை இதனால் முடக்கமாகியது தான் காரணம்.

தற்போது அப்பகுதியை சார்ந்த இன்ச் செப் அதிகாரிகள் முன்னெடுத்து 18 மீட்டர் ஆழத்தில் கரைகள் தோண்டப்பட்டு மணல் வெளியேற்றப்பட்டு கப்பல் சாதாரண நிலைக்கு கடலில் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளனர். இதை தற்போது இந்தியாவில் பரவி அதை நெட்டிசன்கள் தங்களின் சிட்டி பகுதிக்குள் எவர் கிவன் கப்பல் உள் நுழைந்தவாறு மீம்ஸ்களை பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள்.