நல்லக்கண்ணு இறுதி மரியாதை!! ரஜினியிடம் படத்தை பற்றி பேசிய தேமுதிக தலைவர்கள்..

Rajinikanth Gossip Today Premalatha Vijayakanth R. Nallakannu
By Edward Feb 26, 2026 08:00 AM GMT
Report

நல்லக்கண்ணு அய்யா இறுதி மரியாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் நேற்று மதியம், தன்னுடைய 101வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நல்லகண்ணு அய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நல்லக்கண்ணு இறுதி மரியாதை!! ரஜினியிடம் படத்தை பற்றி பேசிய தேமுதிக தலைவர்கள்.. | Netizens Troll Rajini Premalatha Talk About Movie

ரஜினி

அதில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லகண்ணு அய்யா பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர்.

இந்நிலையில் இறுது அஞ்சலிக்கு சென்றுள்ள ரஜினியிடம், அங்கு வந்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா மற்றும் அவரது சகோதரர், ரஜினியிடம் KH X RK Promo வீடியோவை பற்றி பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் அவர்களின் செயலை விமர்சித்தும் வருகிறார்கள்.