கர்ப்பத்தோடு பாட்டு பாடிய வனிதா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார், நடித்து இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தினை ஜோவிகா தயாரித்திருந்த நிலையில், வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தினை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் மோசமான வார்த்தையில் விமர்சித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள்
இந்நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் பாடலை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் வனிதா சிவப்பு உடையில் அழுது கொண்டே பாடுவது போல் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நல்லா வாய் விட்டு பாடியிருந்தால் நல்லா இருக்கும் சிஸ்டர் தப்பா இருந்தால் மன்னிக்கவும் என்று பலரும் கேலி செய்து வருகிறார்கள்.