கண்டிப்பாக அவரை டேட்டிங் செய்வேன்.. ராஷ்மிகாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவரை நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என தொடர்ந்து மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை ராஷ்மிகா கொடுத்தார்.
இந்த மூன்று படங்களும் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் புஷ்பா 2 உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. முன்னணி ஹீரோக்களால் கூட செய்யமுடியாத வசூல் சாதனையை ராஷ்மிகா செய்துள்ளார் என பலரும் தங்களது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தனர்.
இப்படி டாப்பில் இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது பேட்டிகளில் எதாவது பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்.
அனிமல் படத்தில் வரும் ரன்பீர் கபூர் காதாபாத்திரத்தை போன்ற ஒருவரை டேட்டிங் செய்வீர்களா என ஒரு நிகழ்ச்சியில் கேட்டதற்கு, "நிச்சயம் டேட்டிங் செய்வேன். நீங்கள் ஒருவரை உண்மையாக காதலித்தால், அவர்களும் உங்களை காதலித்தால், நிச்சயம் மாற்றம் வரும்". ராஷ்மிகா இவ்வாறு பேசி இருக்கும் நிலையில், நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அனிமல் படம் வந்தபோது ரன்பீர் கதாபாத்திரம் toxic ஆனது என ட்ரோல்கள் வந்தது. அதே காரணத்திற்காகதான் தற்போது ராஷ்மிகா பேச்சுக்கும் ட்ரோல்கள் வருகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் இதைப்பற்றி வெளிப்படையாக சொல்லவில்லை. இருவரும் ஒன்றாக வெளிநாட்டிற்கு பயணிப்பது, ஒரே காரில் செல்வது, யாருக்கும் தெரியாமல் சந்தித்து கொள்வது என இருக்கிறார்கள். விரைவில் காதல் குறித்து அறிவிப்பார்கள் என அவர்களது ரசிகர்களுக்கும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.