சம்பந்தம் இல்லாமல் பாடவும் செய்வோம்!! சித்தார்த்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Kamal Haasan Siddharth Shankar Shanmugam Indian 2
By Edward Jul 11, 2024 05:30 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. அனிருத் இசையில் நாளை ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பேட்டியளித்து வருகிறார்கள்.

சம்பந்தம் இல்லாமல் பாடவும் செய்வோம்!! சித்தார்த்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Netizens Trolls Siddharth Indian 2 Speech Sing

அதிலும் கமல், ஷங்கர், சித்தார்த் மூவரும் இணைந்து பல சேனல்களுக்கு பேட்டியளித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வந்தனர். அதில், நடிகர் சித்தார்த் பேட்டியில் தேவையில்லாமல் பாட்டு பாடி மொக்கை வாங்கியது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் பற்றி கமலிடம் கேட்டதற்கு, சித்தார்த் ஆர்வத்தில் பாட்டு பாடியிருக்கிறார். இதை வைத்து நெட்டிசன்கள் சித்தார்த்தை கலாய்த்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.