பிக்பாஸ்-ஆல் எனக்கு நடந்த..அந்த பக்கம்கூட தலைவைத்து படுக்கமாட்டேன்!! பிரபல நடிகை ஓபன்..
ஹரிதேஜா
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை ஹரிதேஜா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் இரு சீசன்களில் கலந்து கொண்டபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், முதல் சீசன் ஹைதராபாத்தில் நடக்கவில்லை, மும்பைக்கு அருகிலுள்ள லோனாவாலாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்தது. இரவு நேரங்களில் புலி உறுமும் சத்தம் வீட்டிற்குள் கேட்கும், சில நேரங்களில் பாம்புகள்கூட உள்ளே வரும். இருந்தாலும் அப்போது தொகுப்பாளராக இருந்த ஜூனியர் என் டி ஆருடன் உரையாடியது அந்த நாட்களை சுவாரஸ்யமாக்கியது என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து கடந்த 2024ல் பிக்பாஸ் சீசன் 8க்குள் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்தார் ஹரிதேஜா.
சீசன் 8ல்
அதுகுறித்து பேசுகையில், முதல் சீசனில் எனக்கு கிடைத்த நற்பெயர், சீசன் 8ல் மொத்தமாக சிதைந்துவிட்டது. நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தப்பின் என்னைப் பற்றி பரவிய எதிர்மறையான விமர்சனங்கள் என்னை நிலைக்குலையச் செய்தது.

அந்த டிரோல்களால் நான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. இந்த ஜென்மத்தில் இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் போகமாட்டேன், அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே இப்போது எனக்கு சலிப்பாக இருக்கிறது என்று ஹரிதேஜா தெரிவித்திருக்கிறார்.