பிக்பாஸ் 5ற்காக தனிமைப்படுத்தப்பட்ட பிரபலங்கள்! பார்ட்டி கொண்டாடி ரகசியத்தை உடைத்த ஷகிலா மகள்

mila biggbosstamil5 kanmani shalushammu gopinathravi
By Edward Sep 28, 2021 08:58 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் பெரிய ஹிட் நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் 4 சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சி தள்ளிச்சென்று தற்போது அதன் ஆரம்பத்தில் இருக்கிறது. பிக்பாஸ் 5ன் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி மக்களிடம் எழுந்து வந்த நிலையில் பலரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு தனி ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மாடலிங் துறையில் இருக்கும் கோபிநாத் ரவியின் பிறந்தநாளுக்காக நடிகை ஷகிலாவின் மகள் மிளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செய்தி வாசிப்பாளர் கன்மணி, ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

5 நட்சத்திர ஹோட்டலில் நடந்த மாடல் கோபிநாத் ரவியின் பிறந்த நாள் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட செய்தி வாசிப்பாளர் கன்மணி சேகரும் பிக்பாஸ் 5ல் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவதுள்ளது. மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டு மறைமுகமாகி கூறியுள்ளார்.

ஷகிலா மகள் மிளாவுன் அவரது படுக்கையறையில் தனிமைப்படுத்தப்பட்ட புகைப்படத்தையும் வெளியுட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

GalleryGalleryGallery