கண்ணம்மாவாக நான் மாட்டேன்? கடைசியில் புது நடிகையை களமிறக்கும் பிரபல சீரியல்..
தமிழ் தொலைக்காட்சியில் பெரியளவில் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பு செய்யும் தொடர் பாரதி கண்ணம்மா. டி ஆர் பியில் முதல் இடத்தில் இருந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியா நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வந்தார்.
சில மாதங்களுக்கு முன் பாரதி தம்பியாக நடித்த நடிகர் விலகினார். இதையடுத்து கண்ணம்மா அப்பா இறந்ததால் அவர் கதாபாத்திரமும் மாற்றப்பட்டது. மேலும் வெண்பா ரோலில் நடிக்கும் பரினா அசாத் கர்ப்பமாகி சில மாதத்தில் குழந்தை பிறக்கவிருப்பதால் அவரையும் மாற்ற இருக்கிறார்கள்.
இந்நிலையில் படவாய்ப்பு காரணமாக கண்ணம்மா ரோல் ரோஷினி சீரியலில் இருந்த விலகப்போவேதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் ரசிகர்கள். அவருக்கு பதிலாக யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நட்சத்திரா நடிக்க கேட்டுள்ளனர்.
கண்ணம்மா கதாபாத்திரத்தின் நடிகையை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிரமங்களும், மாற்றங்களும் நிலவி வருகிறது. தற்போது வினிஷா தேவி என்கின்ற நடிகையை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நட்சத்ரா நடிக்க உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வினிஷா தேவி என்று மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் இவர் செட்டாவாரா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.



