பாரதி கண்ணம்மாவில் அடுத்த வெண்பா யார்? உண்மையை கூறிய கர்ப்பமாக இருக்கும் பரீனா!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கடந்த சில வருடங்களாக மக்களிடையே ஈர்த்து வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி, கண்ணம்மா கதாபாத்திரம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல கண்டண்ட் கொடுக்கும் காட்சிகள் வெளியாக வைரலானது. தற்போது கதையை மாற்றி அமைத்து காட்சிகள் அமைந்து வருகிறது.

பாரதி கண்ணம்மாவின் மிக முக்கிய கதாபாத்திரமான வில்லி ரோல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா அசார் நடித்து வருகிறார். மக்களின் கோபத்தையும் இந்த சீரியல் மூலம் பெற்று அதை தான் பிளஸ்சாக கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பரீனா காதலித்து திருமணம் செய்தவர். அப்படி தற்போது கர்ப்பாமாகி போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டார். இதையடுத்து வெண்பா கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற கேள்விக்கு பரீனா பதிலளித்துள்ளார். வெண்பாவாக நடிக்க போவது யாருமில்லை பரீனா தான் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்