அவரை காதலிக்கிறேனா? வீடியோ மூலம் உண்மையை உளறிய நடிகை நிதி அகர்வால்

simbu Nidhhi Agerwal rumours easwaran DRSTR AshokGalla
By Edward Jan 12, 2022 12:21 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். ஒருசில படங்களில் மட்டும் நடித்து வந்த நிதி அறிமுகமாகி சில ஆண்டுகளில் தமிழில் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அறிமுகமாகினார்.

படம் ஓரளவிற்கு ஓடியதால் நித்தி பெரியளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் சிம்புவுக்கும் நிதிக்கும் காதல் இருப்பதாகவும் சிம்புவின் வீட்டிலே தங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியது. இதையடுத்து விரைவில் இருவருக்கும் திருமணமாகவுள்ளதாகவும் தென்னிந்திய ஊடகங்களில் பரவியது.

அதேசமயம், சமீபத்தில் தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்த நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் அசோக் கல்லாவுடன் ஜோடியாக இணைந்துள்ளார். அசோக்கிற்கும் நிதி அகர்வாலுக்கும் காதல் இருப்பதாக தெலுங்கு சினிமாவில் செய்திகள் வெளியானது. இதுபற்றி படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் இருவரும் தனியார் இணையத்திற்கு பேட்டி கொடுத்து பேசியுள்ளார்கள்.

அப்போது என்னை பற்றி என் குடும்பத்திற்கு தெரியும். எது உண்மை எது தவறு என்றும் அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற வதந்திகள் பள்ளி பருவத்தை போன்று இருக்கிறது என்று நிதிஅகர்வால் கூறியுள்ளார். இப்படி நிதி அகர்வால் பேசியது சிம்புவிடன் காதல் ஒருவேலை உண்மையாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.