பட நடிகைக்கு அரசு வாகனமா?.. சர்ச்சைக்கு நடிகை நிதி அகர்வால் சொன்ன பதில்

Silambarasan Nidhhi Agerwal Actress
By Bhavya Aug 12, 2025 05:30 AM GMT
Report

நிதி அகர்வால்

ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தி வரும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

சமீபத்தில், விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள சென்ற நிதி அகர்வால்; அரசுக்கு சொந்தமான வாகனத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி எப்படி அரசுக்கு சொந்தமான வண்டியில் வரலாம் என்று கேள்வி எழுந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பட நடிகைக்கு அரசு வாகனமா?.. சர்ச்சைக்கு நடிகை நிதி அகர்வால் சொன்ன பதில் | Nidhhi Open Talk About Latest Issue

சொன்ன பதில்

இந்நிலையில், தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

அதவாது, பீமாவரத்தில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நான் சென்றது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் சர்ச்சை பரவி வருகிறது.

ஆனால், அந்த வாகனத்தை அரசு அதிகாரிகள் அனுப்பினார்கள் என்றும் சொல்லப்படுவது ஆதாரமற்றது. விழா ஏற்பாட்டாளர்கள்தான் எனக்கு அந்த வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.  

பட நடிகைக்கு அரசு வாகனமா?.. சர்ச்சைக்கு நடிகை நிதி அகர்வால் சொன்ன பதில் | Nidhhi Open Talk About Latest Issue