டார்ச்சர் செய்தும் இயக்குனருடன் தொடர்பில் இருக்கிறேன்! உண்மையை உடைத்த காஞ்சனா பட நடிகை..
தெலுங்கு சினிமா க்ளாமர் குயினாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கி டம்போலி. இப்படத்திற்கு பிறகு திப்பரா மீசம் எனும் தெலுங்கு படத்தில் படுமோசமான காட்சியில் நடித்து மிரட்டினார்.
போட்டோஷூட் என புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஈர்த்து வந்த நடிகை நிக்கி சமீபத்தில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குனர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடன நிகழ்ச்சி ஒன்றில் நடன கலைஞர்களுடன் வெளிநாட்டில் டான்ஸ் ஆடிய போது தன்னை மற்ற கலைஞர்களை விட ரொம்பவும் கீழ்த்தரமாக நடத்தியிருந்தார்.
இதனால் மன வேதனை தாங்காமல் அழுது கொண்டே சென்றேன் என தெரிவித்துள்ளார். அவர் யாரென்று கூறமாட்டேன் ஏனென்றால் அவருடன் தற்போது தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.