பல ஆயிரம் கோடியில் அனந்த் - ராதிகா திருமணம் ஏன்? விளக்கம் அளித்த நீடா அம்பானி..
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அப்படி அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தினார். திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இந்நிலையில், ப்ளூம்பெர்க் டிவிக்கு நீடா அம்பானி அளித்த பேட்டியொன்றில் மகன் திருமணத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
நீடா அம்பானி விளக்கம்
அதில் எந்தவொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்ததை தான் தரவேண்டும் என்று விரும்புவார்கள். அதைத்தான் நாங்களும் செய்தோம். அனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது, இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பிராண்டுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
மேலும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய பாரம்பரிய நடைமுறைகள் இந்நிகழ்வின் மூலம் சர்வதேச அளவில் பலருக்கும் சென்று சேர்ந்தது என்று கூறியுள்ளார்.
என் மகன் அனந்த் சிறுவயதில் இருந்தே உடல் பருமன் பிரச்சனையை சந்தித்து ஆஸ்துமா பிரச்சனை காரணமாக பல்வேறு மருந்துகளை உட்கொண்டாதால் உடல் இப்படி ஆனது. ஆனால் மிக தன்னம்பிக்கையோடு அவர் ஒரு மணமகனாக அந்த மணமேடையில் வந்து நின்ற தருணம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று நீடா அம்பானி எமோஷ்னலாக பேசியுள்ளார்.