அம்பானி மனைவி நீதா அம்பானியின் ஹேண்ட்பேக்!! இத்தனை கோடியா?
நீதா அம்பானி
ஆசியாவின் நம்பர் பணக்காரர்களில் டாப் இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார் வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ரோல்ஸ் ராய்ஸ், உள்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கும் அம்பானி குடும்பத்தினருக்கும் நீதா அம்பானி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை சமீபத்தில் வாங்கினார் நீதா அம்பானி.
ஹேண்ட்பேக்
இந்நிலையில், பிரபல ஆடைவடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா பாலிவுட் பிரபலங்களுக்கு தீபாவளி பார்ட்டி கொடுத்திருக்கிறார். அந்நிகழ்ச்சிக்கு நீதா அம்பானி மற்றும் அவரது மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது நீதா அம்பானி சிறிய Kellymorphose in white gold & diamonds கைப்பை கையில் எடுத்து வந்துள்ளார். தற்போது அந்த சிறிய ஹேட்ன்பேக் விலை எவ்வளவு என்ற விவரம் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
Kellymorphose in white gold & diamonds பிராண்ட் வகையான இந்த கைப்பை சுமார் ரூ. 17 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஹேண்ட்பேக், முழுக்க முழுக்க வெள்ளை நிற தங்கம் மற்றும் டைமண்ட் கற்களால் பதியப்பட்டுள்ளது.