எனக்கு திருமணம் செய்ய ஆசைதான், எதிரானவள் இல்லை!! நடிகை நித்யா மேனன்..

Nithya Menen Marriage Tamil Actress Actress Thalaivan Thalaivii
By Jai Nov 21, 2026 12:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நித்யா மேனன், திருமணத்திற்கு நான் எதிரானவர் அல்ல, தன்னுடைய வாழ்க்கை தேர்வுகள் வித்தியாசமானது, பொருத்தமான உறவுக்காக மட்டுமே திருமணத்தை நாடுவேன், சுதந்திரமான வாழ்க்கையை விரும்புவதாக கூறியிருக்கிறார்.

எனக்கு திருமணம் செய்ய ஆசைதான், எதிரானவள் இல்லை!! நடிகை நித்யா மேனன்.. | Nithya Menen Said Marriage Is Not Her Main Goal

நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திருமணம் குறித்து பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், நான் எப்போதும் தனியாகவே பயணம் செய்வேன், எப்போதும் அப்படித்தான். நான் திருமணத்திற்கு எதிரானவள் கிடையாது, ஆனால் அது உண்மையல்ல, எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசைதான்.

எனக்கு பொருத்தமான ஒருவரை கண்டறிய விரும்புகிறேன், ஆனால் நான் திருமணத்தை தேடவில்லை. ஒருமுறையான உறவைத்தான் நாடுகிறேன். அது அப்படிப்பட்ட உறவாக இல்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். வாழ்க்கையில் ஒருவர் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

எனக்கு திருமணம் செய்ய ஆசைதான், எதிரானவள் இல்லை!! நடிகை நித்யா மேனன்.. | Nithya Menen Said Marriage Is Not Her Main Goal

அகங்காரத்தின் அடிப்படையில் ஒருவர் நடந்து கொண்டால் அந்த உறவு ஒருபோதும் சரியாக இருக்காது. நான் விரும்பும் வாழ்க்கைக்கு பொருத்தமான ஒருவரைக்கூட என் வாழ்க்கையில் நன் சந்தித்தது இல்லை. அது பெரிய விஷயமல்ல. வாழ்க்கையில் என் தேர்வுகள் வித்தியாசமானவை.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் மிகவும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிலர் அவ்வாறு மகிழ்ச்சியாக இல்லை. சில நேரங்களில் நாமே தெர்வு செய்யும் ஒருவரை விவாகரத்து செய்ய வேண்டி இருக்கலாம், எது சரி? தவறு என்று நம்மால் கூற முடியாது என்று நித்யா மேனன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.