கைக்கொடுக்க வந்த உதவியாளர்!! தொடாதீங்கன்னு சொன்ன நித்யா மேனன் மீது கோபத்தில் ரசிகர்கள்..
காதலிக்க நேரமில்லை
இயக்குநரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி, நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம் உருவாகியுள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனின் செயலை பார்த்து பலரும் விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நித்யா மேனன் செயல்
நிகழ்ச்சிக்கு வந்த நித்யா மேனனிடம் உதவியாளர் ஒருவர் கைக்கொடுக்க வந்தபோது, எனக்கு உடம்பு சரியில்லை என்று அவருக்கு கைக்கொடுக்க மறுத்துவிட்டார்.
அதன்பின் நிகழ்ச்சிக்கு வந்த வினய் மற்றும் ஜெயம் ரவியுடன் நெருக்கமாக சென்று வரவேற்றும் இயக்குநர் மிஸ்கின் கன்னத்தில் முத்தமிட்டும் இருக்கிறார் நித்யா மேனன். இதனை பார்த்த பலர் கண்டபடி நித்யா மேனனை விமர்சித்து வருகிறார்கள்.
உதவியாளர் கைகொடுக்கா வந்தா உடம்பு முடியலனு சொல்லி தவிர்த்துட்டு நடிகர்களோட ரொம்ப நெருக்கமா பாசத்த காட்றாங்க நித்யாமேனன். ஏன் ஜெயம் ரவி, வினய்கலாம் கொரோனா பரவாதா ?#Nithyamenon #KadhalikkaNeramillai pic.twitter.com/q18ADw9Jq0
— Spicy Chilli (@SpicyChilli4U) January 8, 2025