நான் எப்படிபட்டவள் என்று அவர்களுக்கு தெரியும்.. தயாரிப்பாளர் விரும்பியதை செய்ய மறுத்த தனுஷ் பட நடிகை
நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 18 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் திருச்சிற்றம்பல விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வார இறுதியில் 100 கோடியை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நித்யா மேனன். ஷோபனா ரோலில் தனுஷுக்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றார். சமீபத்தில் கூட தன்னை தாய் கிழவி என்று கூப்பிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மலையாளத்தில் தக்ஷினம் ஒரு பெண்குட்டி என்ற படபத்தில் நடித்து வரும் நித்யா மேனன் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளரை சந்திக்க மறுத்த விசயம் தற்போது பிரச்சனையாகியுள்ளது. இதனால் நித்யா மேனன் திமிர் பிடித்தவர் அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன், நான் ஒன்றும் திமிர் பிடித்தவள் கிடையாது. அப்படிதான் சினிமாத்துறையில் நினைத்து வருகிறார்கள். சினிமாவில் எனக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் விரும்பியதை நான் செய்யாதபோது என்னை பற்றி அவதூறு பொய்களை பரப்புகிறார்கள். எனது வளர்ச்சியை தடுத்து கீழே தள்ளப்பார்க்கிறார்கள். என்னுடன் நடித்த கலைஞர்கள் கூட என்னுடன் பணியாற்றுவது கடினம் என்று கூறியதும் இல்லை. என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.